ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கியதற்கு பாராட்டுக்கள்: கமல்ஹாசன்

Report Print Kabilan in இந்தியா

ஒரு கலைஞராக இருந்து கொண்டு நடிகை நயன்தாராவை விமர்சித்த ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியதற்கு கமல்ஹாசன் தி.மு.கவிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாராவை விமர்சித்த நடிகர் ராதாரவியை பலரும் கண்டித்து வரும் நிலையில், தி.மு.க தனது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை தற்காலிக நீக்கம் செய்தது.

அதனைத் தொடர்ந்து பேட்டியளித்த ராதாரவி, தன்னிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கலாம். அது மட்டும் தான் மனதிற்கு வருத்தமாக இருப்பதாகவும், தான் பேசியது அவர்களை கஷ்டப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இந்த விடயம் குறித்து கூறுகையில், ‘நயன்தாராவை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

ராதாரவி ஒரு கலைஞராக இருந்து கொண்டு இப்படி பேசியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.கவுக்கு பாராட்டுகள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்