காதலியை திருமணம் செய்ய மறுத்த காதலன்..தாயிடம் கண்ணீர் விட்ட இளம் பெண்! கடத்தல் சம்பவத்தின் பின்னணி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த மகளின் காதலனை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்த தாய் உட்பட மூன்று பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா கன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (25).

இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் திருவொற்றியூர் கார்கில் நகரை சேர்ந்த 22 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இதனால் இரண்டு பேரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர்.

இந்நிலையில், அந்த பெண், கிருஷ்ணாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார். தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அவர் அந்த பெண்ணிடம் பேசுவதையே நிறுத்தியுள்ளார். இது குறித்து அந்த பெண் அவரிடம் போன் செய்து கேட்ட போது, உனக்கு வேறு ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் உள்ளது. இதனால் உன்னை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன்னுடைய காதலன் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் தாய், தன் மகளை கிருஷ்ணராஜாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

அதன் படி நேற்று முன்தினம் கிருஷ்ணராஜுவின் செல்போனில் தொடர்புகொண்ட பெண்ணின் தாய், திருமண விஷயமாக உன்னிடம் பேசவேண்டும். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் பகுதிக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணராஜ், தனது நண்பர் வசந்தகுமாருடன் வடிவுடையம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் மாலை சென்றார். அப்போது அங்கு தயாராக இருந்த பெண்ணின் தாய் உட்பட 4 பேர், கிருஷ்ணராஜை காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதைக் கண்ட அவரின் நண்பர் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த பொலிசார் அந்த கரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகளுக்கு கிருஷ்ணராஜை திருமணம் செய்து வைக்கவே அவரை அழைத்துச் சென்றேன், கடத்தவில்லை அந்த பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.

இதனால் பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்