அதிகம் பெண்களை அழைத்து வருபருக்கு ரூ10ஆயிரம் பரிசு: பொள்ளாச்சி விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்

Report Print Abisha in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய நபராக ஹரிஷ் என்ற நபர் செயல்பட்டதும், இவர்கள் PAID என்ற குழு உருவாக்கி பெண்களை கவர்ந்து பிரபலத்தின் மகனுக்கு இரையாக்கியதும் வெளிவந்துள்ளது.

பொள்ளாச்சி விவகாரம் சில நாட்களாக அதிகம் பேசப்பட்ட விடம் எனலாம். ஆனால் இதில் முக்கிய குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில் தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் இதில் குற்றவாளிதான் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இதற்கு பல முறை மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனை தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையின் விசாரணை குழு நடத்திய விரிவான அலசலில் ஒரு முக்கிய ஆதாரம் சிக்கி உள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீனின் நெருங்கிய நண்பனான ஹரிஷ் இதில் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். ஆனால் அவரை இன்னும் பொலிசார் கைது செய்யவில்லை. ஆனால், ஹரிஸ்ன் நண்பர் ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், அவர்கள் PAID என்ற பெயரில் ஒரு குழு அமைத்துள்ளனர்.

PAID என்றால் People against legitimate depth என்பது பொருள். இதன் மூலம் பள்ளி, கல்லூரி வாசல்களில் நின்று பெண்களை கவருவது அந்த பெண்ணின் தொடர்பை ஏற்படுத்தி பிரவீனுக்கும் மற்ற முக்கிய புள்ளிகளுக்கும் இரையாக்குவதே முக்கிய பணி. இதன் மூலம் அதிகம் பெண்களை அழைத்து வந்தால் பிரவீண் கையால் பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் இப்படி இதில் 100க்கு மேற்பட்ட இளைஞர்கள் செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹரிஷ்-யிடம் நக்கீரன் குழு பேசியுள்ளது. அவன் தொலைபேசி எண் எப்படி பெற்றீர்கள் என்று முதலில் வினவி உள்ளான் பின்பு நான் PAID என்று பைக்கி ஒட்டி கொண்டது உண்மைதான் ஆனால் அந்த குழுவிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளான்.

ஆனால் அந்த குழுவில் உள்ள சபரிராஜனும், ஹரியும்தான் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Nakkheeran

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்