தினகரன் வேட்பாளர்களை குறி வைக்கும் முதல்வர் எடப்பாடி? ஓட்டு பிரியாமல் இருக்க செய்யும் தந்திரம்

Report Print Santhan in இந்தியா

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தினகரனின் அமமுக வேட்பாளர்களை பேரம் பேசி விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலின் திகதி அறிவித்துவிட்ட நிலையில், முதற்கட்டமாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டுள்ளார்.

மிகவும் பார்த்து நிதானமாகவும் நேர்த்தியாகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாக தினகரன் தெரிவித்திருந்தார்.

ஆனால் உண்மையில் எம்பி தேர்தலுக்கான தினகரன் கட்சியின் வேட்பாளர்கள் பெரிய அளவில் பணபலம் இல்லாதவர்களாகவே உள்ளனராம்.

அதே சமயம் பண பலம் உள்ளவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை என்பதால், கட்சியில் தீவிரமான செயல்பாட்டில் உள்ளவர்களை தேர்வு செய்து தினகரன் வேட்பாளர் ஆக்கியுள்ளார்.

இந்த நிலையில் தினகரனுக்கு தேர்தலுக்கு முன்னரே பின்னடைவை ஏற்படுத்தும் வேலையில் அதிமுக இறங்கியுள்ளது.

இதில் முதல் கட்டமாக தினகரன் கட்சியில் இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு அதிமுக குறி வைத்துள்ளது.

அதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தினகரன் கட்சியின் இடைத் தேர்தல் வேட்பாளர்களை வளைத்துப் போடுவதில் மிகவும் மும்முரமாக உள்ளது.

எம்பி தேர்தலைப் பொருத்தவரை தினகரனின் வேட்பாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார்கள். ஆனால் இடைத்தேர்தலை பொறுத்தவரை தற்போது தினகரன் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்தவர்கள்.

பழைய எம்எல்ஏ என்கிற முறையில் அவர்கள் கணிசமான வாக்குகளை பிரிப்பார்கள் என்பதால் இந்த முயற்சியில் இறங்கியுள்ளாராம்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தலைமைச் செயலகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரு நபர் உதவி வருவதாக கூறப்படுகிறது. அந்த நபர் தான் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ஆலோசகர் போல் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்