இரவில் வீட்டு கதவை திறந்த செவிலியர் பெண்.... வெளியில் நின்றிருந்த தம்பதி.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் வீடு வாடகைக்கு கேட்பதுபோல நடித்து மூதாட்டியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த செளரிபாளையம் பகுதியில் ஓய்வுபெற்ற செவிலியரான மேரி ஏஞ்சலின் என்பவர் வசித்து வந்தார்.

இரவு நேரத்தில் ஒரு தம்பதி அவரது வீட்டுக்கு வந்து கதவை தட்டிய நிலையில் மேரி திறந்தார், பின்னர் வீடு வாடகைக்கு உள்ளதா என அவர்கள் கேட்டனர்

அத்துடன் வீட்டை திறந்து காட்டுமாறு கூறினர். இதையடுத்து மேரி வீட்டை திறந்து தம்பதிக்கு காட்டி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அந்த தம்பதி மேரியை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர்.

பின்னர் மேரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

இதன்பின்னர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், மேரி வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் மேரியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்