பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: 4 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Report Print Kabilan in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும், ஏப்ரல் 2ஆம் திகதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவை பொலிசார் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், பல வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் காணோளி காட்சி மூலம் பொள்ளாச்சி நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, 4 பேருக்கும் ஏப்ரல் 2ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்