காலையில் தூங்கி எழுந்து கழிவறை நோக்கி சென்ற மனைவி: கணவரால் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கழிவறை நோக்கி சென்று கொண்டிருந்த மனைவியை கணவன் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரை சேர்ந்தவர் குர்பக்‌ஷ் சிங். இவர் காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி வந்தனா. தம்பதிக்கு இடையில் ஒருவாரத்துக்கு முன்னர் ஒரு விடயம் தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இருவருமே மன வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை தூங்கி எழுந்த வந்தனா வீட்டின் கழிவறை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது தீடீரென வந்தனாவை நோக்கி சென்ற குர்பக்‌ஷ் சிங் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவர் தலையில் சுட்டார்.

பின்னர் தன்னை தானே அவர் சுட்டு கொண்டார். இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குர்பக்‌ஷ் - வந்தனா தம்பதியின் இரண்டு பிள்ளைகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இது குறித்து பேசும் நிலையில் அவர்கள் இல்லை என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்