பொள்ளாச்சி பாலியல் வீடியோவை வெளியிட்ட நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன்

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் தொடர்பான வீடியோ வெளியிட்டது குறித்து பதிலளிக்கக் கோரி நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து பணம், பொருட்களை பறித்த 4 பேர் கைதுசெய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோவை நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் வெளியிட்டார்.

பொள்ளாச்சி சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் செய்தி வெளியிட்டிருந்தார்.

மேலும், அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் குடும்பத்தினருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் தேனி கண்ணன் ஆகியோர் வரும் 25ஆம் திகதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும்படி சிபிசிஐடி பொலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்