மனைவியை கண்ணிமைக்கு நேரத்தில் கத்தியால் குத்திய கணவன்! நீதிபதி கண்முன்னே நடந்த பயங்கரம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நீதிபதி கண்முன்னே மனைவியை கணவன் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அங்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னை ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் சரவணன். மாநகர பேருந்து ஓட்டுனராக இருக்கும் இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை வந்ததால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இரண்டு பேரும் இன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

இருவரும் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், ஒன்றாக அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது இருவருக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட, கோபத்தின் உச்சிக்கு சென்ற சரவணன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணிமைக்கும் நேரத்தில் வரலட்சுமியின் நெஞ்சில் கத்தியால் குத்தினார்.

இது அங்கிருந்த நீதிபதி கண்முன்னே நடந்துள்ளது. அதன் பின் இதைக் கண்ட அங்கிருந்த பொலிசார் உடனடியாக அவரை மடபிடிக்க, வரலட்சுமி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சரவணனிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்