பக்கோடா விற்க சொல்லும் நீங்களா காவலர்? பிரதமர் மோடியை விளாசும் இளைஞர்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக இளைஞர் ஒருவர் தொலைக்காட்சியில் பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தபடும் வீடியோவிலும் டிவிட்டர் பக்கத்திலும் chowkidar என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைத்தார்.chowkidar என்றால் ஊர்காவலர் என்பது பொருள்.

இதனை, அவர் நாங்கள் நாட்டின் காவலர் என்று கூறுவது போல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து இளைஞர் ஒருவர் செய்த விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தனியார் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர்கள் கலந்து கொண்டனர். மக்கள் அவர்களிடம் கேள்வி கேட்பது போல் இந்த விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அப்போது அந்நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் கடுமையான விமர்சனத்தை கேள்வியாக எழுப்பினார். அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடி எங்களை பக்கோடா விற்க சொல்கிறார். அவரை அவரே ஊர்காவலர் என்று சொல்லிக்கொள்கிறார்.

எங்களுக்கு காவலன் தான் வேண்டும் என்றால், நாங்கள் நேபாளத்தில் இருந்து கூர்க்காவை வரவழைத்துக் கொள்வோம். அங்கு நிறைய கூர்க்காக்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு ஊர்காவலர் தேவை இல்லை. எங்களுக்கு தேவை ஒரு பிரதமர் தான்.

முன்னர் ஆட்சி செய்தவர்கள் எல்லோரும் நாட்டை சீரழித்துவிட்டார்கள் என்று மோடி கூறுகிறார். ஆனால் அவர் பிறப்பதற்கு முன்னே பாபா அணு ஆராய்ச்சி நிலையம் உள்ளது. மோடி வீட்டில் கோஹ்லி விளையாடும்போது, பக்ரா நங்கல் அணை முன்னாள் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது என்பதை அவர் மறக்க கூடாது’ என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பா.ஜ.க-வினர் சிலர் இவரின் வீடியோவிற்கு பதில் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்