ஈழ போர் குறித்து.... 7 தமிழர்கள் விவகாரம்! வெளியானது அதிமுக-வின் மக்களவை தேர்தல் அறிக்கை

Report Print Raju Raju in இந்தியா

மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தின் ஆளும்கட்சி அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ஆம் திகதியில் இருந்து நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழகத்தை ஆளும் அதிமுக தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின் வருமாறு,

  • மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • விவசாய கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம்.
  • நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .
  • கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து.
  • காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உடனே மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
  • தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு.
  • ஈழப் போர் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையாக விசாரணை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
  • காவிரி டெல்டா பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்