நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி? வெளியான தகவல்

Report Print Kabilan in இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி, மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா. இவரது மனைவி ரிவபா, கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜ்புத் சமூகத்தின் பெண்கள் அமைப்பான ‘கர்னிசேனா’வின் தலைவியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் பா.ஜ.கவில் கடந்த சில நாட்களுக்கு முன் இணைந்தார். கட்சியில் இணைந்தது குறித்து அவர் கூறியபோது, ‘பிரதமர் மோடிதான் உந்துசக்தி. அதனால் தான் பா.ஜ.க-வில் இணைந்தேன்.

இந்தக் கட்சியில் இணைந்ததன் மூலம் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என நினைக்கிறேன். என் முதல் இலக்கு பெண்களுக்கான அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பது தான்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட அவர் முயற்சி செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த தொகுதியில் ஏற்கனவே பூனம் மாடம் பா.ஜ.க அமைச்சராக இருக்கிறார்.

அவருக்கு மீண்டும் சீட் கொடுக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், ரிவபா தனக்கு சீட் வேண்டும் என்று கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்