இலங்கை அகதிகளுக்கு..தமிழர்கள் 7 பேர் விடுதலை விவகாரம்! திமுகவின் பக்கா நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியானது

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் 18-ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

 • மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
 • தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழ் மொழியில் செயல்பட நடவடிக்கை
 • வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட்.
 • நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
 • தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
 • கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும், அருங்காட்சியகமும் அமைக்கப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும்.
 • கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும். சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய திட்டம் தொடங்கப்படும்.
 • 10ம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை. மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
 • 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை.
 • இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை, மாணவர்களுக்கு இலவச ரயில் பயண சேவை போன்றவை அறிவிப்பில் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்