வைரலாகும் சீமானின் ஆடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து வேட்பாளர்கள் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். வருங்கால சமுதாயத்துக்கு நம்பிக்கையாக நான் இருந்துவிட்டுப்போகிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது தொண்டர் ஒருவரிடம் அநாகரீகமாக பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கட்சியில் உண்மையாக களப்பணி ஆற்றும் தொண்டர் ஒருவருக்கு சீட்டு வழங்க வேண்டும் என்று சக தொண்டர் ஒருவர் கேட்டுக்கொண்டதையடுத்து, அவருக்கு எதிராக சீமான் மிகவும் கடுமையான சொற்களில் கட்சி தொண்டரை சாடியுள்ளார்.

நான் யாரை நிறுத்துகின்றேனோ அவருக்காக வேலை செய்யுங்கள். இல்லை என்றால் கட்சியை விட்டு செல்லுங்கள் என பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்