திருமண மேடையிலேயே மயங்கி உயிரைவிட்ட பெண்: பதறவைக்கும் வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது நடனமாடி கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்வில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்ற நடன மங்கையர்கள் ஊரின் பாரம்பரிய இசைக்கு ஏற்றவாறு நடனமாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது குழுவின் பங்கேற்றிருந்த ஹக்சிங்ஜலியா என்கிற பெண் திடீரென மயங்கி தரையில் விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த அனைவரும் பதறிப்போய் அவருக்கு முதலுதவி செய்ய முயன்றனர்.

ஆனால் அதற்குள்ளாகவே அந்த பெண்ணின் உயிர்பிரிந்துவிட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்