பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நகைச்சுவை நடிகர் சின்மோய் ராய் மாரடைப்பால் தனது 79வது வயதில் மரணமடைந்துள்ளார்.

பெங்காலி திரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் சின்மோய் ராய்.

இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 10.20 மணிக்கு சின்மோய் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

சின்மோயின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவர் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers