திருப்பதி கோவில் வளாகத்தில் தங்கியிருந்த தமிழக தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி: சிசிடிவியில் சிக்கியது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

திருப்பதி கோவிலுக்கு சென்ற தம்பதியின் 3 மாத குழந்தையை பெண் ஒருவர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் தம்பதி திருமலையில் தங்கி பாசிமணிகளை விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலையில் கோவில் வளாகத்தின் அருகில் திறந்த வெளிப்பகுதியில் தங்களது ஆண் குழந்தையுடன் அந்த தம்பதி தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் எழுந்த போது அருகில் தங்களது குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தம்பதி பொலிஸ் புகார் அளித்த நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கமெராக்களை ஆய்வு செய்த போது அதில், பெண் ஒருவர் குழந்தையுடன் செல்வது பதிவாகியிருந்தது.

அந்த புகைப்படத்தை வைத்து பொலிசார் அப்பெண்ணை வலை வீசி தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்