விஜயகாந்தின் கோட்டை கள்ளக்குறிச்சியில் மைத்துனர் சுதீஷ் போட்டி!

Report Print Samaran Samaran in இந்தியா

பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இப்பணி நிறைவடைந்ததும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வேட்பாளர்களை அறிவித்தார்.

அதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக செயலாளருமான எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். திருச்சியில் டாக்டர் இளங்கோவன், விருதுநகரில் அழகர்சாமி, வடசென்னையில் அழகாபுரம் மோகன் ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுகிறார். விஜயகாந்துக்கு செல்வாக்கு உள்ள தொகுதி என்பதால், கவுதம சிகாமணியை எதிர்த்து சுதீஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்