கண்முன்னே போன காதலியின் உயிர்..அடுத்த சில நிமிடங்களில் காதலன் எடுத்த முடிவு! பெண்ணின் தாய் கதறல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலி இறந்த துக்கம் தாங்க முடியாமல் காதலன், சாலையில் வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியதால் அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த திம்மாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர்.

அதில் ஒரு மகள் ராஜலட்சுமி, கடந்த 2014 -ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள காவலர்களுக்கான குடியிருப்பில் தங்கியிருக்கும் ராஜலெட்சுமி, திருச்சி மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், ராஜலட்சுமிக்கும், அவருடன் காவல்துறையில் பணிக்குத் தேர்வான திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் இருவரும் பணிநிமித்தம் காரணமாக அடிக்கடி சந்தித்து கொண்டதால், இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம், திருச்சி திருவெறும்பூர் பகுதியில் பணிக்குச் சென்ற ராஜலட்சுமி பணியை முடித்து மாலை வீடு திரும்பியுள்ளார்.

அதன்பிறகு காதலர் சிவக்குமார் மற்றும் தனது குடும்பத்தாருடன் அடுத்தடுத்து போன் பேசியுள்ளார்.

அதன் பின் நேற்று காலை சிவக்குமார், ராஜலட்சுமிக்கு போனில் தொடர்பு கொண்ட போது, அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சிவக்குமார், உடனடியாக ராஜலட்சுமியின் அறைக்கு சென்ற பார்த்த போது, மயங்கி கிடந்த ராஜலட்சுமி தான் விஷம் குடித்துவிட்டேன் என்று கூற, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ராஜலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார்.

இதனால் தன் காதலியின் உயிர் கண் முன்னே போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிவக்குமார், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, அவள் இல்லாத உலகில் நானும் இருக்கப்போவதில்லை என்று விரக்தியாக பேசியுள்ளார்.

பேசிய அடுத்த சில நொடிகளிலே அங்கிருந்து புறப்பட்ட சிவக்குமார், திருச்சி-திண்டுக்கல் சாலையில் வேகமாக சென்று அந்த வழியாக வந்த லாரி மீது மோதினார்.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு, ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது, சிவக்குமார் தொடர்ந்து ராஜலெட்சுமி நானும் வந்து விடுகிறேன் கூறிக் கொண்டே இருந்துள்ளார்.

ஒரு புறம் மரணமடைந்த காதலி சடலமாகக் கிடக்க, மறுபுறம் உயிருக்குப் போராடிய காதலன் சிவக்குமார் துடித்துக்கொண்டிருக்க, பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் சிவக்குமார், மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததால், ராஜலட்சுமியின் தற்கொலை மற்றும் சிவக்குமாரின் விபத்து போன்றவற்றின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மகள் இறந்த தகவலைக் கேட்டு வந்த ராஜலட்சுமியின் தாய், அவரின் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார்.

அதன் பின் சிவக்குமார் என்னுடைய மகளை காதலிக்கும் படி தொந்தரவு செய்ததன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

ஆனால் முதல் கட்ட விசாரணையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்