பாராளுமன்ற தேர்தலில் அவதாரம் எடுக்கும் கமல்..மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in இந்தியா

பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல், வெளியாகும் திகதியை துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் திகதி நடத்தப்படுகிறது.

இதற்காக அனைத்து கட்சிகளும் மும்பரமாக தங்களுடைய கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது.

இந்த நிலையில் பொதுவாக ஒரு கட்சியின் சார்பில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமே வேட்பாளராக போட்டியிட முடியும்.

ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியோ யாருக்கெல்லாம் மக்கள் பணியாற்ற விருப்பம் இருக்கிறதோ அவரெல்லாம் இந்த தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்களை அளிக்கலாம் என தெரிவித்திருந்தது.

அதன்படி அளித்த வேட்பாளர்களை வித்தியாசமான முறையில் நேர்காணல் நடத்தப்பட்டது.

வேட்பாளர் பட்டியல் தயாராகிவிட்ட நிலையில் கமல்ஹாசன் வரும் 20-ஆம் திகதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார் என துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்