திருமணமான சில மாதத்தில் படுக்கையறையில் இறந்து கிடந்த மனைவி: அதிர்ச்சியில் உறைந்த புதுமாப்பிள்ளை

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் படுக்கையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்தவர் சிவா (24). டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு தனது தந்தையுடன் கட்டிட காண்டிராக்டராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி செளந்தர்யா. இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரவு சிவா, செளந்தர்யா இருவரும் சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்கு சென்று தூங்கிவிட்டனர்.

நேற்று காலை படுக்கையில் இருந்து எழுந்த சிவா, தனது மனைவி செளந்தர்யாவை எழுப்பினார். ஆனால் அவர் அசைவற்று கிடந்தார். அவர், படுக்கையிலேயே மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிந்தது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த சிவா இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் செளந்தர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து செளந்தர்யாவின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers