பெண்களின் அலறல் சத்தம்.... பண்ணை வீட்டில் திருநாவுக்கரசு ஆபாச படம் எடுத்தது உண்மைதான்: உறுதி செய்யப்பட்ட தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் நேற்று சி.பி.சி.ஐ.டி பொலிசார் நடத்திய சோதனையில் சில தகவல்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

சி.பி.சி.ஐ.டி, பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிசார் சாதாரண உடையில் சென்றுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து வந்து சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி திருநாவுக்கரசை அழைத்து வந்து அவர் முன்னிலையில் தான் சோதனை நடத்த வேண்டும். ஆனால் அவரை வெளியில் அழைத்து வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவரை அழைத்து வரவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒரு மணிநேர சோதனையில், அங்கிருந்து பென் டிரைவ் உள்பட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வீட்டிற்கு பெண்களை அழைத்து வரும்போது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக கார் கண்ணாடிகள் கூலிங் ஸ்டிக்கரினால் மறைக்கப்பட்டுள்ளது.

3 ஆபாச வீடியோக்களில் 2 வீடியோக்கள் இந்த வீட்டின் உள்பகுதியில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆபாச வீடியோ எடுக்கும் போது பெண்களின் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக அந்த வீட்டில் அதிக சத்தம் எழுப்பும் சவுண்ட் சிஸ்டம் அமைத்துள்ளனர். இதையும் நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்