அந்த இளம் பெண் அவன் கிட்ட சிக்கி தவித்த சத்தம் இருக்கே...மிகுந்த வேதனையுடன் கமல் வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த விவகாரத்தில், நடிகர் கமல் மிகுந்த வேதனையுடன் முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட பல பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்த இளைஞர்களின் செய்ல தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் திருநாவுக்கரசு என்ற இளைஞன் தான் முக்கிய குற்றவாளி என்று கூறப்படுவதால், அவனுக்கு மரணதண்டனை தான் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

பொள்ளாச்சி, கோவை, உடுமலை, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி போலீசார், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் தலைவரும், நடிகருமான கமல் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு, இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers