பொள்ளாச்சி சம்பவ முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி பொலிசார் சோதனை... சிக்க போவது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி பொலிசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

7 ஆண்டுகளாக 200 கல்லூரி மாணவிகள், பெண்களை பேஸ்புக் மூலம் ஏமாற்றி பலாத்காரம் செய்த கும்பலின் செயல் தான் தமிழகத்தின் தலைப்பு செய்தியாக தற்போது மாறியுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை பொலிசார் இதுவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் தான் நடந்துள்ளது.

இதையடுத்து மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி பொலிசார் தற்போது ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடி எஸ்.பி. நிஷா தலைமையிலான பொலிஸ் படை திருநாவுக்கரசு வீட்டில் சோதனை நடத்தி வருகிறது.

திருநாவுக்கரசு வீட்டில் உள்ள குடும்பத்தினரிடமும் பொலிசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.

விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers