பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களிடம் புகார் அளிக்கலாம் என்றும் அவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கும்பல் ஒன்று பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெண் அளித்த புகாரின் மூலம் தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த வழக்கு சிபிசிஐடி பொலிசாருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கோவையில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் அளிக்கலாம்.

இவ்வழக்கு சம்பந்தமாக, இதில் தொடர்புடைய எதிரிகளால் பாதிக்கப்பட்டோர் cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவலை தெரிவிக்கலாம். வழக்கு தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்களை 9488442993 ல் தெரிவிக்கலாம் என்றும், வழக்கின் முக்கியத்துவம் கருதி பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி புகைப்படம் வீடியோ வெளியிட வேண்டாம் என்றும் சிபிசிஐடி கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் தகவல் தரவேண்டிய முகவரி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை, நெ. 800, அவினாசி ரோடு. என்ற முகவரியிலும் புகார் மற்றும் தகவல்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அனைத்தும் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்