பெண்களை மிரட்டி பணம் பறித்த பொள்ளாச்சி பாலியல் கும்பல்: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் அந்த பணத்தை வைத்து என்ன செய்தார்கள் என தெரியவந்துள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 200-க்கும் அதிகமான பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திய கும்பல் அவர்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தனர்.

பின்னர் அந்த வீடியோவை வைத்து அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

இந்த பணத்தை வைத்து அவர்கள் என்ன செய்தார்கள் என தற்போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு.

இவரின் தந்தை ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில் வட்டி தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் பெண்களிடம் இருந்து பறித்த பணத்தை வைத்து திருநாவுக்கரசு பைனாஸ் தொழிலை சொகுசாக செய்து வந்துள்ளார்.

அதே போல இன்னொரு குற்றவாளியான சதீஷ், பெண்களிடம் வாங்கிய பணத்தை வைத்து ரெடிமேட் துணிக்கடை நடத்தி வந்துள்ளார்.

சதீஷ் கைதான பிறகு அந்த கடை பூட்டப்பட்டுள்ளது.

இந்த கடையில் உள்ள சிசிடிவி கமெரா பதிவுகளை ஆய்வு செய்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers