மனைவியின் இரு கால்களையும் துண்டாக வெட்டி எடுத்த கணவன்! அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மகள்

Report Print Vijay Amburore in இந்தியா

ஆந்திராவில் மனைவியின் இரு கால்களையும் துண்டாக வெட்டி எடுத்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் பிச்சையா. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. திருமணம் நடந்ததிலிருந்தே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் வீட்டிலிருந்த எருமை மாடுகளை விற்பனை செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பிச்சையா, குடிக்க தண்ணீரும், கோடரியும் எடுத்து வருமாறு மனைவியிடம் கூறியுள்ளார்.

மனைவி கொண்டு வந்த கோடரியை வாங்கிகொண்டு, அவரது இருகால்களையும் துண்டாக வெட்டி எடுத்துள்ளார். நள்ளிரவில் தாயின் அலறல் சத்தம் விழித்தெழுந்த மகள் வேகமாக ஓடிவந்து பார்த்தபொழுது, ரத்த வெள்ளத்தில் ராஜேஸ்வரி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய மகள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிச்சையாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்