42 வயதில் நபருக்கு திருமணம்... தாலி கட்ட சில மணி நேரங்களே இருந்த நிலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் கிணற்றில் சடலமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுந்தப்பாடி அருகே உள்ள மின்னவேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் வெங்கிடுசாமி (42).

இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பெண் ஒருவருக்கும் நேற்று புதன்கிழமை கோவிலில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது

திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்த நிலையில் மணமகன் வீட்டார் நேற்று முன்தினம் இரவே கோவிலுக்கு சென்று மண்டபத்தில் தங்கியிருந்தனர்.

அதன்பின்னர் இரவு 1 மணி வரை திருமண சடங்குகள் நடைபெற்று பிறகு அனைவரும் தூங்க சென்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வெங்கிடுசாமி குளித்துவிட்டு வருவதாக உறவினர்களிடம் கூறிச்சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை.

இதனால் உறவினர்கள் அவரை தேடி சென்ற நிலையில், 10 மணி அளவில் வெங்கிடுசாமியின் ஒரு செருப்பு மட்டும் கிணறு அருகே கிடந்ததை பார்த்தனர்.

உடனே கிணற்றுக்குள் அவர்கள் எட்டிப்பார்த்த போது தண்ணீரில் வெங்கிடுசாமி பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு அந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து வெங்கிடுசாமியின் உடலை மீட்டனர்.

தகவலறிந்து வந்த பொலிசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குளிப்பதாக கூறிவிட்டு சென்ற வெங்கிடுசாமி கிணற்று அருகே உள்ள மரத்தில் பல் துலக்குவதற்காக வேப்பம் குச்சியை பறிக்க முயன்றபோது கால் இடறி கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers