100-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த இளைஞர்கள்... நேரலையில் இந்த தண்டனை கொடுக்க வேண்டும் என ஆவேசமாக பேசிய பிரபல நடிகை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில், குற்றவாளிகளை நிற்க வைத்து சுட வேண்டும் என்று பிரபல திரைப்பட நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கும்பல் செய்தியை கேட்டு தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் மனம் ஆறாமல் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியும், ஆறுதலாக சில வார்த்தைகள் பேசியும் வருகின்றனர்.

இந்நிலையில் தான், பிரபல திரைப்பட நடிகை விஜய்லட்சுமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், யோசிக்க வேணாம், நேரலையில் அவர்களை நிக்க வச்சு சுடுங்க, .. பயம் வரட்டும். பணபலம், அதிகாரம், வயசு, குரூர மனச்சுனு இந்த காம்பினேஷன்ல காலைத் தூக்கி காட்டற கருமாந்தரோலா பயத்துல பொத்திகிட்டு பொழப்ப பாக்கணும்.. உயிர் பயம் வந்தாதான் உருப்படுவான்ங்க போட்ருங்க சார் உடனே என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்