பொள்ளாச்சி விவகாரம்! அழுது தவிக்கிறேன்... நடிகர் ராஜ்கிரண் உருக்கமான வேண்டுகோள்

Report Print Fathima Fathima in இந்தியா

பொள்ளாச்சி விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக்கில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதில்,

“ஒரு தகப்பனாய், ஒரு தாத்தனாய், பல நூற்றுக்கணக்கான என் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை நினைத்து, அவர்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டிருப்பதை அறிந்து, அழுது தவிக்கிறேன்...

தனிமனிதனான என்னால், எதுவுமே செய்ய முடியாமலிருக்கும், எனது இயலாமையை நினைத்து குமுறுகிறேன்...

அரசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும், காவல் துறைக்கும், புலனாய்வுத்துறைக்கும் தெரியாமல், ஏழு வருடங்களாக, இப்படி பல படுபாதகச்செயல்கள் நடந்து, ஆயிரக்கணக்கான காணொளிகள் எடுக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்பே இல்லை...

ஆதலால், தமிழ் நாட்டின் மாணவச்செல்வங்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், மனித நேயர்கள் அனைவரையும் உதவி கேட்டு நான் கெஞ்சுகிறேன்...

இந்த வழக்கை பொறுப்பில் இருக்கும் காவல் துறையினரிடமிருந்து தவிர்த்து,

சிறப்பு நீதி மன்றத்தின் மூலம், நீதி மன்றத்தின் மேற்பார்வையிலேயே, தன்மானமும், கடமை உணர்வும், அரசியல், அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாத நேர்மையும், நெஞ்சுரமும் கொண்ட காவல் துறை அதிகாரிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் வழக்கை நடத்தி,

குற்றம் சாட்டப்பட்டவர்கள், மற்றும் அவர்களுக்கு துணை போன, அவர்களுக்காக மூடி மறைத்த, அவர்களால் பயனடைந்த அத்தனை முக்கிய பிரமுகர்களையும் கூண்டிலேற்றி, நீதியை நிலை நாட்டவும் தர்மம் காக்கப்படவும், உங்கள் அனைவரையும் கெஞ்சுகிறேன்...” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...