பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்தது ஏன்? ராகுல் காந்தி விளக்கம்

Report Print Kabilan in இந்தியா

அரசியலை எனக்கு கற்றுக்கொடுத்ததால் மோடி மீது எனக்கு அன்பு ஏற்பட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இதற்காக சென்னை வந்த அவர் இன்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு சென்றார். அங்கு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.

அப்போது ராகுல்காந்தி கூறுகையில், ‘ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதால் சிறு மற்றும் நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி முறையில் மாற்றம் கொண்டுவரப்படும். குறைந்த வரி நிர்ணயம் செய்யப்படும்.

நீரவ் மோடிக்கு ரூ.35 ஆயிரம் கோடி வங்கி பணத்தை மத்திய அரசு தந்தது. அவர் எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார். யாரையும் எவரையும் விசாரிக்க அரசுக்கு உரிமை இருக்கிறது. குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே குறிவைத்து சட்டத்தை செலுத்தக்கூடாது.

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய தடையாக இருப்பது ஊழல். அனைவரும் ஒற்றுமையாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். 2014ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றதில் ஒரு நன்மை இருக்கிறது. அரசியலை எனக்கு கற்றுக்கொடுத்ததால் மோடி மீது எனக்கு அன்பு ஏற்பட்டது’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி திடீரென பிரதமர் மோடி கட்டிப் பிடித்தது பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்