பொள்ளாச்சியில் பாலியல் சம்பவம் நடந்த பங்களாவில் புகுந்த மர்மநபர்கள்... சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்கள் நடத்தப்பட்ட பங்காளாவின் கதவு உடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மர்மநபர்கள் புகுந்து சாட்சியங்களை அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாட்சியை சேர்ந்த மர்ம கும்பல், 100க்கும் அதிகமான பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் வீட்டில் தான் இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளது.

வீடானது பொள்ளாச்சியின் சின்னப்பம்பாளையத்தில் அமைந்துள்ளது.

இந்த வீட்டின் கதவு திடீரென உடைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உள்ளிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் வீடியோக்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் உண்மைகள் வெளிவராமல் இருக்க இந்த சாட்சியங்களை அழிக்கவே இவ்வாறு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த வீட்டின் கதவை பொலிசார் உடைத்து உள்ளே சென்றிருக்கலாமா என்ற சந்தேகமும் உள்ளது. ஆனால் ஒருவர் மட்டுமே உள்ளே செல்லும் அளவில் கதவு உடைக்கப்பட்டுள்ளது.

பொலிசார் சென்றால் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருக்கும் அல்லது கதவு சாவியின் மூலம் திறக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இப்படி எதுவும் நடக்காததால் மர்மநபர்களின் கைவரிசையாகவே இது இருக்கும் என கூறப்படுகிறது. காவல் துறையினர் இது குறித்து இன்னும் எதுவும் வெளியில் தெரிவிக்கவில்லை.

அவர்கள் இது தொடர்பாக பேசினால் மட்டுமே இது குறித்த முழு உண்மை வெளியில் வரும்.

இதனிடையில், பொள்ளாச்சி விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை தேவை எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்