இணையத்தில் பரவிய இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள்: விசாரணையில் அம்பலமான கொடுமை

Report Print Vijay Amburore in இந்தியா

பெங்களூரில் பெற்றோர் உதவியுடன் மனைவியின் ஆடைகளை களைந்து, அவருடைய நிர்வாண புகைப்படங்களை கணவரே இணையத்தில் வெளியிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த 26 வயது இளம்பெண் தற்போது அவருடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் ஒரு விசித்திர காரணம் கொண்ட புகாரினை அளித்துள்ளார்.

அதில், கடந்த 2017-ம் ஆண்டு நகரில் இருந்த விலையுயர்ந்த திருமண மகாலில் என்னுடைய திருமணம் நடைபெற்றது. ரூ.30 லட்சம் செலவில் திருமணத்திற்கான முழுச்செலவையும் என்னுடைய தந்தையே ஏற்றுக்கொண்டு நடத்தினார்.

திருமணம் முடிந்த அன்று இரவு, என்னுடைய கணவருக்கு ஆண்மைக்குறைவு இருப்பதை கண்டறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். இதுகுறித்து அவர்களுடைய வீட்டாரிடம் கேட்டபொழுது என்னை கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். என்னை வீட்டு வேலைக்காரியை போல நடத்தியவர்கள், நீ யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என கூறினர்.

அதோடு மட்டுமில்லாமல் என்னுடைய கணவர், அவருடைய நண்பர்கள் மற்றும் சகோதரருடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு என்னை வற்புறுத்தினார்.

இதற்கிடையில் என்னுடைய கணவரின் ஆண்மைகுறைவிற்கான இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது என என்னிடம் கேட்டார்கள். ஏற்கனவே திருமணத்திற்கு அதிக செலவு செய்ததை நினைத்து நான் பெரும் கவலையில் இருந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்தேன்.

இதனால் ஒருநாள் எனக்கு மயக்கமருந்து கொடுத்து என்னுடைய ஆடைகளை களைந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். பின்னர் எனக்கு தெரியாமல் என்னுடைய பேஸ்புக் பக்கத்தை முடக்கி, அதில் அனைத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார். விழித்து போது என்னை ஒரு விபச்சார அழகி என குறிப்பிட்டு பதிவிட்டிருப்தை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பேஸ்புக்கில் இருந்த வீடியோக்களை நீக்கிய அந்த பெண், கணவன் விட்டார் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் வீடியோக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்