பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் பப்புக்கு வலுக்கும் சமூக வலைதள எதிர்ப்பு - #GoBackRahul

Report Print Abisha in இந்தியா

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்புவகிக்கும் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உடன் கூட்டணியில்இருக்கும் தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதற்காக அவர் சென்னை வந்துள்ளர். பிற்பகலில் விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல உள்ளார்.

இதற்காக பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று உலக அளவில் ராகுல்காந்திக்கு எதிரப்பு தெரிவித்து #GoBackRahul #GoBackPappu ஹாஷ் டாக்குகள் அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் பாஜாக, அதிமுக உடனான கூட்டணி கட்சியுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய சென்னை வந்தபோது #GoBackModi என்ற ஹாஷ் டாக் அதிக அளவில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers