பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்! நிறைய வீடியோக்கள் உள்ளது... பொள்ளாச்சி குற்றவாளிகள் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை இளைஞர்கள் பிடித்து எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், இந்த விவகாரம் தொடர்பாக திருநாவுக்கரசு மற்றும் சபரிடமிருந்து விசாரிக்கும் இளைஞர்கள் சிலர், இந்த வன்கொடுமை குறித்த விவரங்களை கேட்கின்றனர்.

அதற்கு அடிதாங்க முடியாமல் பேசும் திருநாவுக்கரசு, இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுடைய வீடியோவை சபரியிடமிருந்து பெற்றதாக கூறுகிறார்.

இளைஞர்கள் அதட்டி கேட்கும் போது மேலும் பேசும் அவர், பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வீடியோக்களும் உள்ளன. வீடியோக்கள் பலரிடம் பகிரப்பட்டுள்ளது என்றும் திருநாவுக்கரசு தெரிவிக்கிறார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கொடூர கும்பலிடம் சிக்கி, கொடுமையை அனுபவிக்கும் வீடியோ வெளியாகி பலரையும் கலக்கமடையச் செய்தது. மீண்டும் இந்த விவகாரம் பரபரப்பை எட்டிய நிலையில், பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த கும்பல் குறித்த விவரங்கள் தெரியவந்தன.

இந்த விவாகரத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் மற்றும் வசந்த் குமார் ஆகியோரை கோவை மாவட்ட காவல்துறை கைது செய்தது.

தற்போது இந்த வழக்கை சிபிஐ-யிடம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், குற்றவாளிகள் 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்த கும்பலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மிரட்டி 1100 வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், இந்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் மட்டுமே புகார் அளித்துள்ளனர். மேலும் நான்கு வீடியோக்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வீடியோவில் இளைஞர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் குற்றவாளிகள் திருநாவுக்கரசு மற்றும் சபரி, தங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய வீடியோக்களும் இருப்பதாக கூறுகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் வெறும் 4 வீடியோக்கள் மட்டுமே இருப்பதாக போலீசார் கூறிய நிலையில், குற்றவாளிகளின் வீடியோ தெரிவிக்கும் இந்த தகவல்கள், இவ்வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்