கேரளாவில் பயங்கரம்: காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர்

Report Print Fathima Fathima in இந்தியா

கேரளாவில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்ட மாவட்டத்தில் ரேடியாலஜி படித்து வரும் மாணவி கல்பனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இதே பகுதியை சேர்ந்த அஜின் ரேஜி மேத்யூ, கல்பனாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

கல்பனா அஜினின் காதலை ஏற்க மறுத்துள்ளார், தொடர்ந்து கல்பனாவின் பெற்றோரை அணுகிய போதும் அவர்களுக்கு திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த அஜின் நேற்று கல்லூரிக்க சென்ற கல்பனாவை, வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மறுபடியும் கல்பனா ஒப்புக்கொள்ளாததால், தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கல்பனாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்தனர், அஜினையும் விரட்டிபிடித்து பொலிசிடம் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து அஜினிடம் பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கல்பனா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்