157 பேருடன் பலியான புதுமணப்பெண்: கடைசியாக கணவருக்கு அனுப்பிய மெசேஜ்... பதில் வருவதற்குள் வெடித்து சிதறிய விமானம்!

Report Print Vijay Amburore in இந்தியா
2521Shares

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 157 பேருடன் பலியான இந்திய பெண்ணுக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 157 பயணிகளுடன், கடந்த 10ம் திகதியன்று காலை 8.38 மணிக்கு புறப்பட்ட எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் அடுத்த 6 நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது.

இதில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். மேலும் இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.

அதில் ஒருவரான ஷிக்கா கார்க் நைரோபியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார்.

இவர் 3 வருட டேட்டிங்கிற்கு பிறகு தன்னுடைய காதலன் சவுமியா பட்டாச்சார்யாவை 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துள்ளார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஷிக்கா தன்னுடைய கணவருக்கு, 'நான் விமானத்தில் ஏறிவிட்டேன். தரையிறங்கியதும் உங்களுக்கு போன் செய்கிறேன்' என மெசேஜ் செய்துள்ளார்.

ஆனால் அவருடைய கணவர் அதற்கு பதில் அனுப்புவதற்குள்ளாகவே ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிவிட்டதாக கூறியுள்ளனர்.

மனைவியுடன் சேர்ந்து பட்டாச்சார்யாவும் செல்வதற்கு டிக்கெட் பதிவு செய்திருந்தார். ஆனால் ஒரு அவரச கூட்டத்திற்காக அதனை ரத்து செய்திருப்பதாக கூறியுள்ளார். புது தில்லியில் வாழ்ந்த தம்பதிகள், நைரோபியில் இருந்து கார்க்கின் திரும்பி வந்த பிறகு, விடுமுறைக்கு வெளியில் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்