ரூ.600 கோடிக்கு அதிபதி... பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட பரிதாபம்: வெளிவரும் பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ரூ.600 கோடிக்கு அதிபதியான தாதா பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தமது சகோதரர் ராமா என்பவருடன் இணைந்து பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர் லக்ஷ்மணா.

இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தங்களுக்கு எதிராக எந்த அணி உருவானாலும், அவர்களை மிரட்டி பணியவைப்பதை வாடிக்கையாக செய்து வந்தனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு இவர்களுக்கு போட்டியாக உருவான மாச்சா மஞ்சா என்பவரை 40 பேர் கொண்ட கும்பலுடன் சென்று கொடூரமாக வெட்டிக்கொன்றனர்.

பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பெங்களூரு நகரை அப்போது உலுக்கியது. சுமார் 600 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு மற்றும் அரசியல் செல்வாக்கும் இருப்பதால் இவர்கள் இருவரையும் பொலிசாராலும் நெருங்க முடியவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் லக்ஷ்மணா குடியிருப்பில் இருந்து ஏராளமான கறுப்புப் பணம் பொலிசாரால் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வழக்கில் சிறியில் இருந்து வந்த லக்ஷ்மணா, கடந்த 22 ஆம் திகதி பிணையில் வெளிவந்துள்ளார்.

நேற்று இவர் தனது காரில் சென்றுகொண்டிருக்கும் போது மகாலக்ஷ்மி லேஅவுட் பகுதியில் உள்ள இஸ்கான் கோயில் அருகே 5 பேர் கொண்ட கும்பல் இவரின் காரை வழிமறித்துள்ளது.

கொலை முயற்சி என புரிந்துகொண்ட லக்ஷ்மணா மற்றும் அவரது சகோதரர் வேகமாக அங்கிருந்து தப்பியுள்ளனர்.

ஆனால் அவர்களை துரத்திச் சென்ற அந்த கும்பல், லக்ஷ்மணாவின் காரை மறித்தது. உள்ளே இருந்த லக்ஷ்மணா மீது மிளகாய்ப் பொடி வீசி வெளியே இழுத்தனர்.

பின்னர் பட்டப்பகலில் ஏராளமாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த கும்பல் லக்ஷ்மணாவை வெட்டிக் கொன்றுள்ளனர்.

இதனிடையே தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்துவந்த பொலிசார், லக்ஷ்மணாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers