புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழர்கள் உட்பட 40 வீரர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு: எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1.01கோடி நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த மாதம் 14ஆம் திகதி தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன், சிவச்சந்திரன் உள்ளிட்ட 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது.

அதன்படி ஒரு வீரரின் குடும்பத்துக்கு ரூ. 1.01 கோடி நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அதாவது, ராணுவவீரர்கள் உயிரிழந்தால் ரூ.35லட்சம் அவர்களது குடும்பத்துக்கு தரப்படும்

இதோடு பணிக்கான தொகை, காப்பீடு, வீரதீர செயல்களுக்கான நிதி சேர்த்து ரூ.1.01கோடி நிதி வழங்கப்படவுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers