தமிழன் என்று சொல்லுவது தகுதியா? இதை சொல்லுங்கள்! கொந்தளித்து பேசிய நடிகர் கமல்

Report Print Santhan in இந்தியா

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழன் என்று சொல்லி ஓட்டு கேட்காதீர்கள், தகுதியை கூறி ஓட்டு கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

அப்போது பிரபல திரைப்பட நடிகையான கோவைசரளா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அதன் பின் அவர் நான் ஏன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தேன் என்பது குறித்து விளக்கமளித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய கமல், ஒரு செயலை நாம் செய்யும்போது கிண்டலடித்தனர். ஆனால், நம் செயல்கள் வெற்றி பெற்ற பிறகு நாங்கள் தான் அதனைச் செய்ய ஆரம்பித்தோம். அதற்குள் அவர் செய்துவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

நல்லது ஏற்கெனவே உலகத்தில் இருக்கிறது. அதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதைத் தேடாமல் 20-30 ஆண்டுகளை தமிழகம் கடந்துவிட்டது.

அதை நாம் மாற்றியமைக்க வேண்டும். யாராவது வர மாட்டார்களா என கேட்கக் கூடாது. அப்படித்தான் நானும் காத்துக்கொண்டிருந்தேன்.

அதற்கு நாம் தான் வர வேண்டும். புரட்சி உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. நாம் தொண்டர்களை பார்த்துப் பேசவில்லை, தலைவர்களைப் பார்த்துப் பேசுகிறோம்.

நான் தமிழன் என்பதற்காக வாய்ப்பு கேட்காதீர்கள், தகுதியைச் சொல்லி வாய்ப்பு கேளுங்கள். தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தமிழன் என சொல்லி வாய்ப்பு கேட்பதும் குடும்ப அரசியல்தான். திறமையில்லாமல் தமிழனாக இருப்பவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியதில்லை. எங்கு, யாரை வைக்கிறீர்கள் என்பது முக்கியம் என்று கூறி முடித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers