பட்டப்பகலில் பலாத்கார முயற்சி... மெரினா கடலில் குதித்த இளம்பெண்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னை மெரினா கடற்கரையில் தனியாக இருந்த இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நால்வர் கும்பலை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதனால் எப்போதுமே மெரினா கடற்கரை பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் நேற்று மாலையில் இளம்பெண் ஒருவர் மெரினா கடற்கரைக்கு தனியாக வந்து விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள மணற்பரப்பில் அமர்ந்துள்ளார்.

இதை நோட்டம் விட்ட நால்வர் கும்பல், குறித்த இளம்பெண்ணின் அருகாமையில் சென்று அமர்ந்துள்ளது.

சிறிது நேரத்திற்கு பின்னர், திடீரென்று அந்த இளம்பெண் அழுதபடியே ஓடிச்சென்று கடலில் குதித்துள்ளார்.

இதை கவனித்த பொதுமக்களில் சிலர் கடலில் குதித்து குறித்த இளம்பெண்ணை மீட்டுள்ளனர்.

அதிக கடல் நீர் குடித்ததால் மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம் அவர் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

அதில், தாம் தனியாக அமர்ந்திருந்ததை பார்த்த இளைஞர்கள் நால்வர் தம்மை சுற்றி அமர்ந்ததாகவும்,

தங்களின் ஆசைக்கு இணங்க வேண்டும் என நிர்பந்தித்ததாகவும், எழுந்து செல்ல முயன்ற தம்மை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இரண்டு கைகளையும் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளதாகவும்,

ஒரு கட்டத்தில் அவர்களிடம் இருந்து தப்பியோடி, கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளாதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது பாதிக்கப்பட்ட இளம்பெண் அமர்ந்திருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த காண்காணிப்பு கமெரா காட்சிகளை சேகரித்து அந்த நால்வர் கும்பலை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers