நடிகர் சத்யராஜின் மகள் எழுதியுள்ள கடிதம்

Report Print Raju Raju in இந்தியா

கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக இரும்பு சத்துள்ள மருந்துகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள சத்யராஜ் மகள் திவ்யா அது தொடர்பாக அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திவ்யா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், பெண்களின் இரும்பு சத்து குறைபாட்டை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக இரும்பு சத்துள்ள மருந்துகளை வழங்க வேண்டும்.

இரும்புச்சத்து குறைபாடு கர்ப்பிணிக்கு மட்டுமின்றி பிறக்கும் குழந்தைக்கும் ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்