100க்கும் மேற்பட்ட அழகிய பெண்களுடன் காதல்! பல உண்மைகள் காத்துக்கொண்டிருக்கின்றன..... இப்படிக்குத் திரு: பகீர் கிளப்பும் ஆடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளை குறிவைத்து காதல் வலை வீசி அவர்களை தவறாக வீடியோ எடுத்த திருநாவுக்கரசு என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவி ஒருவர் தன்னை சபரிராஜன் என்பவர் காதலித்து வந்ததாகவும் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து என்னை தவறாக வீடியோ எடுத்து மிரட்டுகிறார் என புகார் அளித்திருந்தார்.

கல்லூரி மாணவி அளித்த புகாரின்படி, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரையும் உடனடியாக கைது செய்த பொலிசார் தலைமறைவான திருநாவுக்கரசு என்பவரை தேடி வந்தனர்.

குறித்த மாணவி மட்டுமல்லாமல் பல மாணவிகள் மற்றும் திருமணமான பெண்கள் இந்த கும்பலிடம் சிக்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களின் செல்போனில் 200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும் அந்த வீடியோக்களை வைத்து மிரட்டி பல லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறித்துள்ளதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் திருநாவுக்கரசு பேசிய ஆடியோ பகிர் கிளப்பியுள்ளது. அதில், "இந்தப் புகார் முற்றிலும் பொய்யானது. நான் பெரும் உண்மையைச் சொல்லப் போகிறேன்.

அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆதரவு, வழக்கறிஞர்கள் ஆதரவும் வேண்டும். என் உயிரே போனாலும் பரவாயில்லை. இதில் பலபேர் உள்ள இருக்காங்க. பல உண்மைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. இப்படிக்குத் திரு! என்று பேசியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனால்தான் திருநாவுக்கரசை கைது செய்ய தாமதம் ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகின.

திருநாவுக்கரசின் வீட்டில்தான் எல்லாம் நடந்துள்ளது. அவனைப் பிடித்தால்தான் அனைத்து உண்மைகளும் வெளியே வரும் அதுவரை எதுவும் சொல்ல முடியாது என காவல்துறை தெரிவித்து வந்த நிலையில் தற்போது திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...