இந்திய விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரம் இருக்கிறதா? நிர்மலா சீதாராமன் பதில்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய விமானப் படை தாக்குதலுக்கு சாட்டிலைட் புகைப்பட ஆதாரம் இருக்கிறதா என்பதை தெரிவிக்க முடியாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் திகதி நடத்த தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது.

ஆனால் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசு தரப்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

அதேமசயம் விமானப் படையினரின் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே விமானப் படையினரின் தாக்குதலில் 350 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.

மட்டுமின்றி, விமானப் படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன்,

விமானப் படை தாக்குதலில் தீவிரவாதிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதில் வெளியுறவு செயலரின் அறிக்கையே அரசின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.

விமானப் படை தாக்குதலுக்கு ஆதாரமாக சாட்டிலைட் புகைப்படம் உள்ளதா என்பதையும் தெரிவிக்க இயலாது என அவர் கூறியுள்ளார்.

இதனால் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது வெறும் புரளியா என்ற சந்தேகத்தை இது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்