நாடாளுமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் தேமுதிக இல்லை…பங்கீட்டை அறிவித்தார் ஸ்டாலின்

Report Print Abisha in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. ஏற்கனவே அதிமுக (அண்ணதிராவிட முன்னேற்ற கழகம்) தனது கூட்டணி நிலைபாட்டை அறிவித்துள்ள நிலையில். தேமுதிக(தேசிய முற்போக்கு திராவிட கழம்) கட்சி தலைவர் விஜயகாந்துடன் தொடர்ந்து இழுபறியில் கூட்டணி விவாதம் சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் திமுக கூட்டணி குறித்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகளும், இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1தொகுதியும், கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு 1 தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கிற்கு 1 தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,மதிமுகவுக்கு மக்களவையில் ஒரு தொகுதியும், மாநிலங்களவையில் ஒரு தொகுதியும்ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பேசிய ஸ்டாலின், தேமுதிகவுடன் திமுகவிற்கு கூட்டணி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தது போக, திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக தனது கட்சிகளை பல படுத்த தேமுதிக-வை தங்கள் வசம் இழுக்க முற்பட்டுவந்தது ஆனால் அந்த கட்சி இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சென்று சந்தித்துள்ளார். இந்நிலையில் திமுகாவுடன் கூட்டணி இல்லாதபட்சத்தில் அதிமுகவுடன்தான் தேமுதிக-வின் கூட்டணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்