பாலகோட் தாக்குதல் விபத்து என்றால்…! அப்போ ராஜீவ் காந்தி கொலையும்…?

Report Print Abisha in இந்தியா

பாலகோட் தாக்குதல் விபத்து என்று கூறிய எதிர்கட்சி மூத்த தலைவருக்கு, அப்போ ராஜீவ் காந்தி கொலையையும் ஒரு விபத்து என்றுதான் கூறுவீர்களா என்று பாஜக அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நடந்த பாலகோட் தாக்குதல் விபத்து என்று காங்கிஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த தற்போது இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் பாஜக-வை சேர்ந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், புல்வாமா தாக்குதலை விபத்து என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளார். அது அப்படி என்றால் அவரிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்,ராஜீவ் காந்தியின் படுகொலையையும் ஒரு விபத்து என்று கூறுவீர்களா என்று கேள்விஎழுப்பி உள்ளார்.

மேலும், பாலகோட் விமானத் தாக்குதல் ஒரேயொருஇடத்தில் மட்டுமே நடைபெற்றது. வேறெங்கும் இல்லை. தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்துக் கேட்கிறீர்கள். அங்கிருந்த கட்டிடங்களில் உள்ளவீடுகளின் எண்ணிக்கையையும் அங்கு வசித்தவர்களின் எண்ணிக்கையையும் தோராயமாகதான்மதிப்பிட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 250க்கும் மேற்பட்டோர் என்ற கணக்கு உத்தேசமான தகவலே தவிர உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல என்று வி.கே.சிங்கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்