கட்டுப்பாட்டை இழந்த கார்... நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்: நெஞ்சைப் பிசையும் சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோர டீ கடைக்குள் புகுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்து, பொலிசார் பாதுகாப்புடன் மரணமடைந்த இருவரது உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மனைவி மணிமேகலை என்பவரே இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்.

சம்பவம் நடந்த இரவு, மணிமேகலை தண்ணீர் பிடிப்பதற்காக சாலையோரமாக நடந்து சென்றுள்ளார். இதேபோன்று அதேபகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் பத்தாம் வகுப்பு படித்துவரும் மகன் கமல்ராஜ், அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நங்கவள்ளி பகுதி நோக்கி கார் ஒன்று சாலையில் தாறுமாறாக வந்துள்ளது.

இதில் பீதியடைந்த மணிமேகலை மற்றும் கமல்ராஜ் ஆகிய இருவரும், அங்குள்ள டீ கடைக்குள் புகுந்துள்ளனர்.

ஆனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அதே டீ கடைக்குள் புகுந்து இருவர் மீதும் மோதி நின்றுள்ளது.

இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரையும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அவர்கள் இருவரும் மருத்துவமனை செல்வதற்குள் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த மூவரும் இந்த சம்பவத்தை அடுத்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் பொதுமக்கள் அவர்களை விரட்டிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, கைதான மூவரிடமும் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்