54 அபிநந்தன்கள் உயிருடன் இருக்கிறார்களா? 48 ஆண்டுகளாக காத்திருக்கும் குடும்பத்தார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சமீபத்தில் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அபிநந்தன் போன்று இன்றும் 54 அபிநந்தன்கள் பாகிஸ்தான் சிறையில் இருப்பவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது 30 ராணுவ வீரர்கள் மற்றும் 24 விமானப்படை வீரர்கள் காணாமல்போனார்கள்.

பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் இன்னும் அவர்கள் போர்க்கைதிகளாக 48 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டும், தங்கள் நாட்டு சிறையில் இந்தியர்கள் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

54 பேரும் பாகிஸ்தான் சிறைகளில் உயிருடன் உள்ளார்களா? எப்போது இந்தியா வருவார்கள்? என கடந்த 48 வருடங்களாக அவர்களது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்