அபிநந்தனை கௌரவிக்க பேஸ்புக் இதை செய்ததா?

Report Print Fathima Fathima in இந்தியா

சமீபத்தில் பாகிஸ்தான் வசமிருந்த அபிநந்தனை கௌரவிக்க பேஸ்புக் புதிய அமிமேஷனை உருவாக்கியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என BBC Fact Check மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது, "போர் விமானி அபிநந்தனை ஃபேஸ்புக் கௌரவிக்கிறது; நீங்கள் 'அபிநந்தன்' என்று தட்டச்சு செய்தால், அந்த சொல் ஆரெஞ்சு நிறத்தில் மாறி பின்னர், பலூனாக வெடிக்கிறது" என்று இந்த பதிவுகள் தெரிவிக்கின்றன.

அபிநந்தன் என்கிற மராத்தி (अभिनंदन) மற்றும் குஜராத்தி (અભિનંદન) மொழிகளிலுள்ள சொற்கள் இது போன்று நிறம் மாறியதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறும் தகவல்கள் 'ஷேர்சேட்' மற்றும் 'வாட்ஸ்அப்' குழுக்களில் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளன.

ஆனால் அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய சிறப்பம்சத்தை உருவாக்கியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த செய்திகள் உண்மையல்ல.

"டெக்ஸ்ட் டிலைட்" ("Text Delight") என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு அம்சத்தை ஃபேஸ்புக் 2017ம் ஆண்டு தொடங்கியது. அது முதல் இது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

2018ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து விளையாட்டு போட்டியின்போது அனிமேஷன் ஒன்றை ஃபேஸ்புக் வெளியிட்டது.

இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துகையில், 15க்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பல சொற்களையும், சொற்றொடர்களையும் எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக், அவற்றை தட்டச்சு செய்கிறபோது, அந்த எழுத்தின் தோற்றம் பிற எழுத்துகளைவிடப் பெரிதாகவும், நிறம் மாறும்படியும் செய்தது.

இதில் ஒன்றாக இடம் பெற்ற சொல்லே அபிநந்தன் என்பதாகும், ஹிந்தியில் இதன் அர்த்தம் பாராட்டுக்கள் (Congratulations) என்று பொருள்.

Text Delight அம்சத்தில் இந்த சொல் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருப்பதாலேயே இவ்வாறு தோன்றுகிறதே தவிர, அபிநந்தனுக்காக உருவாக்கப்பட்டதல்ல என்பதே உண்மை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்