மனைவி இறந்த செய்தி கேட்டு தூக்கில் தொங்கிய கணவன்: அனாதையான குழந்தைகள்

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேசத்தில் இருவேறு இடங்களில் கணவன், மனைவி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 28 வயதான மோகித் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அனுராதா (26) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ரியா என்கிற மகளும் மற்றும் ஒரு வயதில் தியன்சச்சாஷ் என்கிற மகனும் இருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அனுராதா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பணியில் இருந்த மோகித்திற்கு இந்த தகவல் சென்றடைந்ததும், வீட்டிற்கு செல்கிறேன் என கூறி கிளம்பியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையில் அவருடைய இருசக்கர வாகனம் தோட்டத்திற்கு வெளியில் இருப்பதை பார்த்த சிலர், உள்ளே சென்ற போது மோகித் அங்கிருந்த மரத்தில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers